Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு சேவைகள் நாட்டு பிரசைகளுக்கு

நிறுவனத்தினால் பிரசைகளுக்காக


பிரசைகளுக்காக

  • கௌரவ மாகாணசபை உறுப்பினர்களின் பிரமாணங்களின் அடிப்படையில் பன்முகப்படுத்தப்பட்ட நிதியம்.
  • கெமி அருண மாகாண அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களும் சீ.டி.ஈ. அல்லாத வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களும்.

கௌரவ மாகாணசபை உறுப்பினர்களின் பிரமாணங்களின் அடிப்படையில் பன்முகப்படுத்தப்பட்ட நிதியம்

மாகாண சபை உறுப்பினர்களுக்காக பிரமாணங்களின் அடிப்படையிலான, கொடைகளின் கீழ் ஒவ்வோர் ஆண்டிலும் மாகாணத்தின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. அப்பணத்தை மாகாணத்தின் அபிவிருத்திக்காக ஈடுபடுத்தும் போது இயங்குகின்ற நிறுவனங்களாக பிரதேச செயலகங்கள், நகரசபைகள், பிரதேச சபைகள் மற்றும் வலயக் கல்வி அலுவலகங்கள் போன்ற அரச நிறுவனங்கள் உள்ளன.

கௌரவ மாகாண சபை உறுப்பினர்கள் தமது தேர்தல் அதிகாரப் பிரதேசங்களில் வெளிக்கள விஜயங்களை மேற்கொள்ளும் வேளையில் மக்களால் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகளையும் அவர்களாகவே நேரடியாக அவசியமென உணருகின்ற அபிவிருத்தித் தேவைகளையும். ஈடேற்றும் பொருட்டு இப்பணத் தொகைகள் ஆண்டுதோறும் நிதிக்கூற்றுகள் மூலமாக ஒதுக்கப்படும்.


அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படுகின்ற பணத்தை வழங்கக்கூடிய துறைகளாவன,

  • சுயதொழில்களை உருவாக்குதல்.
  • பொருளாதார உட்கட்டமைப்பு  வசதிகளின் அபிவிருத்தி.
  • சமூக உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி.
  • நீர்ப்பாசன மற்றும் விவசாய அபிவிருத்தி.
  • கலாசார மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி.
  • வாகனப் பராமரிப்பு


சுயதொழில்களை உருவாக்குதல்

மாகாணத்திற்குப் பொருத்தமான எந்தவொரு சட்டமுறையான தொழில் முயற்சியை / கைத்தொழிலை சுயதொழிலாக ஆரம்பிப்பதற்காக.

பொருளாதார உட்கட்டமைப்பு  வசதிகளின் அபிவிருத்தி

  • கிராமிய வீதி அபிவிருத்தி
  • குடிநீர் விநியோகம்
  • மின்சாரம், தெருவிளக்குகளுக்காக


சமூக உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி :

கல்வி

  • பாடசாலைக் கட்டிடங்களின் திருத்த வேலைகள். பாதுகாப்பு வேலிகளும் வாயில்களும், பாடசாலை துப்புரவேற்பாட்டுப் பணிகள் மற்றும் குடிநீரை வழங்குதல், விளையாட்டு மைதானங்கள், சிறுவர் பூங்காக்கள், மின்சார விநியோகம்.
  • முன்பள்ளிகளுக்கான கதிரைகள், மேசைகள், வாங்குகள் மற்றும் பிற அத்தியாவசிய சாதனங்கள்.
  • அரசாங்க நூலகங்களுக்கான நூல்கள்.
  • பாடசாலைகளில் கல்வி கற்கும் வறிய திறமைமிக்க மாணவர்களுக்கான நூல்களையும் உபகரணங்களையும் பெற்றுக்கொள்வதற்காக.


சுகாதாரம் (மேலைத்தேய மற்றும் ஆயுள்வேதம்)

  • கிராமிய சுகாதார பிணியாய்வு சேவைகளின் கட்டிடத் திருத்த வேலைகள், நீர்வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டு வசதிகள், கதிரைகள், வாங்குகள், மின்சார விநியோகம்.
  • ஆயுள்வேத மருந்தகங்களுக்கான மின்சார விநியோகம்.
  • வீடு - வீட்டின் கூரைக்கு அவசியமான அஸ்பஸ்டோஸ் தகடுகள். ஓடுகள் அல்லது உலோக மடிப்புத் தகடுகள்.

கிராம அபிவிருத்திப் பணிகள்

  • மரண உதவிச் சங்கங்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கான கதிரைகள் மற்றும் தகரக் கொட்டில்கள், மின்பிற்பாக்கிகள்.
  • கிராம அபிவிருத்திச் சங்க மண்டபங்கள் போன்ற பொது இடங்களுக்கான மின்சார விநியோகம்.


வலது குறைந்தோருக்காக

  • வலது குறைந்தோருடைய நலனுக்கு உபயோகிக்கக்கூடிய தனித்துவமான உபகரணங்கள்.


நீர்ப்பாசன மற்றும் விவசாயத்தில் அபிவிருத்தி செய்யக்கூடிய துறைகள்

  • நீர்ப்பாசன - நிர்மாணிப்புகள், புனரமைப்பு, விவசாயக் கிணறுகளை நிர்மாணித்தல்.


கலாசார அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறையில் அபிவிருத்திசெய்யக்கூடிய துறைகள்.

  • கலாசார அலுவல்கள் - சமய மற்றும் கலாசார வைபவங்களுக்காக, பாரம்பரிய நாட்டியக் குழுக்கள் மற்றும் கலைச் செயற்பாடுகளைப் பேணுதல்.
  • விளையாட்டுத்துறை அபிவிருத்தி  - பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்காக விளையாட்டுச் சாதனங்கள், ஒழுங்கு செய்யப்படுகின்ற விளையாட்டு வைபவங்கள், மாகாண மட்டத்தில் அல்லது தேசிய மட்டத்தில் பிதிநிதித்துவம் செய்கின்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான அணிகள் அல்லது விளையாட்டுச் சாதனங்கள்.


வாகனப் பராமரிப்பு

  • எவ்வாறாயினும் இந்த பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நிதியத்தைப் பிரயோகித்து இதற்கான உதவியை வழங்குவதற்கான இயலுமை கிடையாது.


கெமி அருண மாகாண அபிவிருத்தி மற்றும் சீ.டி.ஈ. அல்லாத வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமாகும்.

கெமி அருண மாகாண அபிவிருத்தி மற்றும் சீ.டி.ஈ. அல்லாத வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமாகும்.
மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் வசதிகள் மிகவும் குறைந்த, வறுமை நிலை அதிகரித்துள்ள, பிற அபிவிருத்திச் செயற்திட்டங்களில் உள்ளடக்கப்படாத கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைத் தெரிவு செய்து அதற்கிணங்க வீதி, மின்சாரம், குடிநீர் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்நிகழ்ச்சித்திட்டம் 2006, 2007, 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் ஊவா மாகாணத்தில் அமுலாக்கப்பட்டதோடு, மாகாணதிட்டமிடல் கூறு நெறிப்படுத்தல் கூறாகவும் பிரதேச செயலகம் அமுலாக்கல் நிறுவனமாகவும் செயற்பட்டது.

 
 
மே 2024
S M T W T F S
28 29 30 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1